November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சென்னையில் பால் முகவரை தாக்கிய திமுக பிரமுகர் – பால் முகவர்கள் சங்கம் கண்டனம் 

சென்னை அயனாவரம் பகுதியில் பால் பூத் நடத்தி வருபவர் ஜெயக்குமார் இவர் வழக்கம் போல தனது கடையில் பணியில் இருந்த போது அவரது கடைக்கு வந்த சசிக்குமார் என்பவர் பால் முகவர் ஜெயக்குமாரை கத்தியால் குத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

சசிக்குமார் ( திமுக பிரமுகர் )என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டதின் அடிப்படையில் அப்பொழுது அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்போது அந்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஜெயக்குமார் மீது விரோதம் கொண்டிருந்த சசிக்குமார் அவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஜெயக்குமார் தற்போது ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை போன்ற பெருநகரங்களில் முடங்கியிருந்த சமூக விரோதிகள் தற்போது சுதந்திரமாக நடமாடுவதும், பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கி வருவதையும் காணும் போது காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளது என்கிற சந்தேகம் எழுவதோடு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளதா என்கிற சந்தேகம் உள்ளது
பொது மக்கள் நலன் சார்ந்து சேவை சார்ந்த தொழிலாளான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, காவல்துறையினர் இனியும் காலம் தாழ்த்தாமல் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் வணிகர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தனது கண்டன அறிக்கையில் குறிபிட்டுள்ளார்

error: Content is protected !!
Open chat