December 5, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசியில் ஒளிரும் எச்சரிக்கை மின் விளக்குகள் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

 

 

 

தென்காசியில் விபத்து பகுதிகளில் ஒளிரும் எச்சரிக்கை மின் விளக்குகள் துவக்க விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் மற்றும் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் அறிவுரையின் பேரில் தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு ஏற்பாட்டில் தென்காசி மற்றும் தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் விதமாக தென்காசி போக்குவரத்து காவல் சார்பாக  தானியங்கி எச்சரிக்கை மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அபாயகரமான வளைவுகள் மற்றும் விபத்து ஏற்படும் எனக் கருதப்படும் மிக முக்கியமான 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வாகனம் ஓட்டி வரும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதத்தில் 500 மீட்டருக்கு முன்பே அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி கோபுர வாசல் அருகே கீழரத வீதியில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி ஒளிரும் மின் விளக்கை காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன்  ரிப்பன் வெட்டி பட்டனை அழுத்தி துவக்கி வைத்தார். மேலும் குத்துக்கல்வலசை சந்திப்பு, கூலக்கடை பஜார், ரயில்வே மேம்பாலம் அருகில், முடுக்கு விநாயகர் கோவில் அருகில், பழைய பேருந்து நிலையம், அம்பை ரோடு, அங்கராயன் குளம் சந்திப்பு ,திருநெல்வேலி ரோடு, அழுத கண்ணீர் ஆற்றுப்பாலம் வளைவு இருபுறமும், ஆசாத் நகர் உள்ளிட்ட 12 இடங்களில் தானியங்கி ஒளிரும் மின் விளக்குகள் செயல்பட தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு, போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார், பி டி ஆர் சிக்னல் மேலாளர் வினோத், மற்றும் ஆட்டோ, கார், வேன் ஓட்டுனர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You may have missed

error: Content is protected !!
Open chat