November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசியில் மின் வாரிய ஊழியர்கள் ஆர்பாட்டம்

தென்காசியில் மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி சிஐடியூ மின்வாரிய கோட்ட செயலாளர் செ.பச்சையப்பன் தலைமை தாங்கினார்.

சிஐடியூ தொழிற் சங்கத்தின் தலைவரும் திட்ட துணை செயலாளருமான எஸ்.அயூப்கான், குணசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்ட்டத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப் படுத்திட வேண்டும். மின்வாரிய தொழிலாளர்கள் சரண்டர் பணப்யன் வழங்கிட வேண்டும். மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் பேச்சு வார்த்தையை துவங்கிட உடனே துவங்க வேண்டும்.

புதிய பிரிவு அலுவலகங்களில்பகுதி நேர ஊழியர்களை உடனே நியமித்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து நிர்வாகிகள் மற்றும் ஆர்ப்பாட்ட்டத்தில் கலந்து கொண்ட மின்வாரிய ஊழியர்கள் கோஷமிட்டனர். முடிவில் சிஐடியூ தொழிற்சங்க தலைவர் எஸ்.அயூப்கான் அனைவருக்கும் நன்றி கூறினார்.

error: Content is protected !!
Open chat