December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தென்மலை அதிமுக பிரமுகர் மரணம் தென்காசி மாவட்ட செயலாளர் அஞ்சலி

 

சிவகிரி அருகேயுள்ள தென்மலை அதிமுக பேச்சாளர் பழனிமுத்து மரணமடைந்ததை அடுத்து அவரது திருவுருப்படத்திற்கு தென்காசிவடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தென்மலையில்அதிமுக தலைமை கழக பேச்சாளர் பழனிமுத்து காலமானார். அவரது வீட்டிற்குச் சென்ற தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளாகிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, மறைந்த பழனிமுத்து திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மாவட்ட செயலாளருடன் வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ., மனோகரன், ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.ஆர்.மூர்த்தி பாண்டியன், மாவட்ட எம்ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர்கள் சின்னத்துரை, ஆயில்ராஜா பாண்டியன், சுப்புராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், மாவட்ட மாணவரணி முன்னாள் தலைவர் சசிகுமார், பேரூர் செயலாளர்கள் வாசு.,சீமான் மணிகண்டன், ராயகிரி சேவுகப்பாண்டியன், சிவகிரி காசிராஜன், ஒன்றி ஜெ.,பேரவை செயலாளர் சாமிவேல், மாவட்ட பிரதிநிதி பெரியதுரை, தொடக்க கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் ராஜாராம் பாண்டியன், மருதுபாண்டியன், வாசு.,ஜெ., பேரவைசெயலாளர் முருகையா, சிவகிரி ஜெ.,பேரவை செயலாளர் வெங்கடேஷ், ஆனந்தன், சக்திவேல், கிளை செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

error: Content is protected !!
Open chat