December 2, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

அமமுக தேர்தல் ஆலோசனை கூட்டம்

 

 

திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சந்திப்பு  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியங்குடி நகரம்,  வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியம்,  சுப்பிரமணியபுரம் ஊராட்சி, தேவிபட்டினம்,  விஸ்வநாதபேரி,  ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பெருமையா பாண்டியன் தலைமை தாங்கினார்.  மாவட்ட  இணைச் செயலாளர் சுமதி கண்ணன்,  மாவட்ட   துணைச் செயலாளர் கே.சண்முகசுந்தரம்,   மாவட்ட சார்பு  அணிகளின்  செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் மாரியப்பன்,  எம்ஜிஆர் இளைஞர் அணி  குமரேசன், பொறியாளர் அணி  சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட  செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன் கலந்து கொண்டு விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை சிறப்பாக செய்யவும், ஒவ்வொரு  வாக்குச்சாவடிக்கும் தேர்வு செய்துள்ள  உறுப்பினர்களுடன் நாள்தோறும்   பொதுமக்களை, வாக்காளர்களை  சந்தித்து  அமமுக  அமோக வெற்றி பெற அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

 கூட்டத்தில் அமமுக

ஒன்றிய  செயலாளர்கள் வாசுதேவநல்லூர் சாமிதுரை, சங்கரன்கோவில் இராம்குமரன், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம்  சுப்பிரமணியன், சிவகிரி பேரூர் செயலாளர் துரைப்பாண்டி, தேவிபட்டினம் ஊராட்சிக் கழகச் செயலாளர் தங்கராஜ், தேவிபட்டிணம் கிளை  செயலாளர் பாலசுப்பிரமணியன், ராமசாமிபுரம் கிளைக் கழகச் செயலாளர் கடல், விஸ்வநாதபேரி ஊராட்சிக் கழகச் செயலாளர் ரகுபதி, விஸ்வநாதபேரி கிளைக் கழகச் செயலாளர் பிச்சை பாண்டி, சுப்பிரமணியபுரம் ஊராட்சிக் கழகச் செயலாளர் உள்ளமுடையார், சுப்பிரமணியபுரம் கிளைக் கழகச் செயலாளர் முருகன், வெள்ளானைக்கோட்டை கிளைக் கழகச் செயலாளர் ராமையா, அமமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஜெகதீசன் கிருஷ்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You may have missed

error: Content is protected !!
Open chat