December 2, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டிய தென்காசி எஸ்பி

தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் 19/10/2020 முதல் 25/10/2020 வரை குற்றங்களை திறம்பட கண்டறிந்தும் குற்றம் நடவாமல் தடுத்தும் மேலும் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் வான் தந்தியின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதில் 21/10/2020 அன்று குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை விலைக்கு வாங்க வந்த நபரிடம் இருந்து 45,00,000 ரூபாயை கத்தியைக்காட்டி பறித்து தப்பி ஓடிய வாகனத்தை விரட்டி சிவகிரி சோதனைச் சாவடியில் அதிரடியாக கைது செய்த குற்றாலம் உதவி ஆய்வாளர் ராஜேஷ், சொக்கம்பட்டி உதவி ஆய்வாளர் வேல் பாண்டியன், சிறப்பு உதவி ஆய்வாளர் வெள்ளத்துரை, தனிப்பிரிவு காவலர் .மருதுபாண்டியன், காவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கார்த்தீசன் ஆகியோர் மெச்சத் தகுந்த பணியாற்றியுள்ளார்கள்.

21/10/2020 அன்று சிவபெருமாள் (60) என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய யாரும் முன்வராததால் பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் தனது சொந்தப் பணத்தில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்து இறுதிவரை உடனிருந்து நல்லடக்கம் செய்து மெச்சத் தகுந்த பணியாற்றியுள்ளார்.

25/10/2020 அன்று குருவிகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர் மற்றும் அவரது வாகனத்தை பறிமுதல் செய்த காவலர் கோட்டைத்துரை மற்றும் தங்கதுரை ஆகியோர் மெச்சத் தகுந்த பணியாற்றியுள்ளார்.

24/10/2020 அன்று ஆரோக்கிய மேரி என்பவரின் வீட்டில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு வீட்டிலிருந்த பொருள்கள் மற்றும் சான்றிதழ்கள் தீயில் அழிந்தன இதில் அப்பெண் கணவன் இல்லாமல் வாழ்ந்து வந்தது அவருக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதை அறிந்த ஆழ்வார் குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழரசன் அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து நிவாரணப் பொருட்களும் மற்றும் புதிய தையல் இயந்திரம் கொடுத்து அவர் வாழ்வதற்கு நம்பிக்கை ஏற்படுத்தியதோடு தன்னார்வலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட நபருக்கு புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற ஏற்பாடு செய்து மெச்சத் தகுந்த பணியாற்றியுள்ளார்.

25/10/2020 அன்று அதிகாலை 3 மணி அளவில் வாகன தணிக்கையின் போது லாரியில் சுமார் 10 டன் அரசு ரேசன் அரிசியை கடத்த முயன்ற நபர்களை கைது செய்த குருவிகுளம் காவலர் சார்லஸ், லட்சுமணமனோகர், அன்னக்கொடி மற்றும் பனவடலிசத்திரம் காவலர் சுரேஷ் மற்றும் .தனசேகர் ஆகியோர்கள் மெச்சத் தகுந்த பணியாற்றியுள்ளனர்.

இவர்களின் பணியை மேலும் ஊக்குவிக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் வான் தந்தியின் மூலம் அவர்களின் பெயர்களை கூறியும் அவர்கள் செய்த மெச்சத் தகுந்த பணியை எடுத்துரைத்த தோடு பாராட்டு தெரிவித்தார்.

You may have missed

error: Content is protected !!
Open chat