தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் போர்காலஅடிப்படையில் சாலைகள், மழைநீர் வடிகால்கள்
மற்றும் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க வேண்டி அறிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. தமிழகத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளதால் வாகனத்தில் செல்லும் மக்களும் நடந்து செல்லும் மக்களும் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு போர்கால அடிப்படையில் உடனடியாக சாலைகள் மற்றும் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும்.
மேலும் மழைநீர் வடிகால் துறை வாயிலாக தமிழக அரசு வடிகால் மற்றும் கால்வாய்களை சிறமைக்க அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஊழியர்களுக்கு உத்திரவிட்டு மக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாகவும், மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்படையாத வண்ணம் போர்கால அடிப்படையில் துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..என தனது அறிக்கையில் குறிபிட்டுள்ளார்
More Stories
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
திருச்சி விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்த மழை!
நாகை மாவட்டத்தில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை