பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் திருமகனார் அவர்களின் 113வது பிறந்தநாள் விழா மற்றும் 58வது குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கழகத்தின் மாநில துணைச் செயலாளர் L K. சுதீஷ் மற்றும் கழக துணைச் செயலாளர் பார்த்தசாரதி முன்னாள் எம்எல்ஏ ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கமுதி ஒன்றிய செயலாளர் வேல் மயில் முருகன் மற்றும் மதுரை மாவட்டம் சிவகங்கை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களும் கழகத் தொண்டர்களும் பெரும் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்
More Stories
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
திருச்சி விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்த மழை!
நாகை மாவட்டத்தில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை