May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி பகுதியில் இன்று பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று கன மழை பெய்தது. இம்மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பரிதவித்தனர். சாலைகளில் வாகனங்கள் மெதுவாகச் சென்றன.

குற்றாலம்மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி வெள்ளம் சீறி பாய்ந்தது. ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. புலியருவி, சிற்றருவியிலும் தண்ணீர் வெள்ளமாக கொட்டியது.

ஏற்கனவே கொரோனா காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை. நேற்று அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அருவிகள் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கன மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் கடனாநதி அணை, ராமநதி அணை,செங்கோட்டை குண்டாறு அணை, மேக்கரை அடவிநயினார் அணை, கடையநல்லூர் கருப்பாநதி அணை ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஏற்கனவே குண்டாறு அணை நிரம்பியதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மறுகால் வழியே வெளியேறுகிறது.

கன மழையால் நிலத்தடி நீர் அதிகரிப்பதால் பொதுமக்களின் குடிநீர் பிரச்னை சற்று குறைந்துள்ளது. மேலும் இம்மழை விவசாயிகளுக்கு பலன்தரக்கூடியதாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தீபாவளி வியாபாரம் சற்று பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் குறிப்பாக சாலையோர வியாபாரிகள் அவதிப்பட்டனர்.

error: Content is protected !!
Open chat