January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனோ வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 25- 3- 2020 ஊரடங்கு உத்தரவு பல்வேறு தடைகள் அமலில் இருந்து வருகிறது தமிழக அரசு இந்த நோய் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது

அதன் விளைவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது ,தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டாலும் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு போன்ற வற்றால் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது தற்போது பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் பண்டிகையை கொண்டாட்டத்திற்காக பல்வேறு பொருட்களை வாங்க கடை வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிகமாக கூடுகின்றனர் அவ்வாறு கூடும்போது முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தாதது இருப்பது ஊடகங்கள் வாயிலாகவும் பல ஆய்வுகள் மூலம் அரசின் கவனத்திற்கு தெரியவந்தது ,

வெளிநாடுகளில் நோய்த் தொற்றானது இரண்டாம் அலையாக மீண்டும் பரவும் நிலையை நாம் காணமுடிகிறது இந்த சூழ்நிலையில் நோய் தொற்று தடுப்பதில் மேலும் தீவிரப்படுத்த வேண்டி வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது  இந்நிலையில் சமுதாய அரசியல், பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் 16 -11 -2020 முதல் நடத்த அனுமதிக்கப்பட்ட உத்தரவு தற்போது ரத்து செய்யப்படுகிறது அவற்றிற்கான தடை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் தொடர உத்தரவிடப்படுகிறது

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் என வல்லுனர்களும் பெற்றோர்களும் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை மட்டும் அனைத்து கல்லூரிகள் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பள்ளி கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரி விடுதிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட அனைத்து விடுதிகளும் 16- 11 -2020 நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளி திறப்பு சம்பந்தமாக பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பொது மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததால் 9 11 2020 அன்று பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் கருத்து கேட்கப்படும் சில பள்ளிகள் திறக்க வேண்டும் என்றும் சில பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு கருதி தற்போது திறக்க வேண்டி இல்லை என்றும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர், இந்த இருவேறு கருத்துக்களை பள்ளிக்கல்வித்துறை ஆராய்ந்து 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மற்றும் விடுதி 16 -11 -2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ரத்து செய்யப்படுகிறது.பள்ளி திறப்பு தேதி சூழ்நிலைக்கேற்ப பின்னர் அறிவிக்கப்படும்.

அதேபோல் கல்லூரிகளை 16 -11- 2020 திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக நிர்வாகங்களிடம் இருந்து கருத்து கேட்ட்கபட்டது இதன் படியும்
இதன்படி 5-11 2020 வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல் படியும் அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு கல்லூரி பல்கலைக் கழகங்களை 2 -11 -2020 முதல் திறக்க உத்தரவிடப்படுகிறது .

மேலும் இதர வகுப்புகளுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் 2- 12- 2020 திறக்கப்படும் கல்லூரியில் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்படும் கல்லூரிகள் மற்றும் விடுதிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் பிற மாணவர்களுக்கு ஏற்க்கனவே நடைபெற்று வரும் இணைய வழி கல்வி முறை தொடர்ந்து நடைபெறும் கொரோனோ தொற்று ஏற்படாவண்ணம் ஒரு மனிதன் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு எடுத்துவரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் முதல்வர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

error: Content is protected !!
Open chat