கொரோனாவில் இருந்து மக்கள் அனைவரும் விடுபட்டு நலமும், வளமும் பெற்று இந்த தீபாவளியில்ஒளிமயமான தமிழகம் அமைய வேண்டும்
தீபாவளி என்றாலே எண்ணெய் குளியல் செய்துவிட்டு, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி பட்டாசு வெடித்து பெற்றோர்களுடனும், பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியோடு தீபாவளி திருநாளை கொண்டாடுவது வழக்கம்.
தீமையை அகற்றி, நன்மையை விளைவிப்பதன் அறிகுறியாகவே விளக்கேற்றி வைக்கும் ஒளித் திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. சாதாரண மக்களில் இருந்து, பெரும் பணக்காரர்கள் வரை தீபாவளி கொண்டாடவே விரும்புகின்றனர். ஆனால், விழாக்களும், பண்டிகைகளும் வருகிறது என்றாலே, ஏழை, நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக யாரிடம் கடன் வாங்குவதென்ற கவலையில் ஆழ்ந்து விடுகின்றனர். ஆனால், இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக தீபாவளி பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக மக்கள் கொண்டாட வேண்டும். கொரோனாவில் இருந்து மக்கள் அனைவரும் விடுபட்டு நலமும், வளமும் பெற்று, நல்லுறவு ஏற்பட்டு இந்த தீபாவளியில் அமைதியுடன் அனைவரும் வாழவேண்டும். ஒளிமயமான தமிழகம் அமைய இந்த தீபத் திருநாளில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
More Stories
அசத்தல் மொய் கலக்கிய மதுரை தம்பதி
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது
பள்ளி தோழிகள் ஒரே சமயத்தில் உயிர் இழப்பு