December 2, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றுவேன்’ – தூத்துக்குடி ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதனை தொடர்ந்து செயல்படுத்துவேன் எனவும், பொதுமக்கள் எப்போதும் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்

தமிழகத்தில் 14 IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து சில தினங்களுக்கு முன்பு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டார். அதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் களை ஒரே நேரத்தில் இடமாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரத்தை அடுத்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் தற்போது சந்தீப் நந்தூரி மாற்றப்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப் பட்டு ள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக தேசிய சுகாதார இயக்க இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த டாக்டர் கே.செந்தில்ராஜ் மாவட்டத்தின் 26 ஆவது ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இதன்படி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது புதுக்கோட்டை யை சேர்ந்த நான், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து பட்டம் பெற்றேன். 2012ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு தேர்ச்சி பெற்று இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தேன், பயிற்சி ஆட்சியர் ஆட்சியராக வேலூர் மாவட்டத்தில் பணியாற்றினேன் துணை ஆட்சியராக திருப்பூர், ஓசூர் ஆகிய மாவட்டங்களிலும் பணியாற்றினேன், மேலும் சுகாதாரத்துறை இந்திய மருத்துவ மருத்துவ துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி உள்ளேன்’.

‘தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தமட்டில் அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதனை தொடர்ந்து செயல்படுத்துவேன். திறமையான அனுபவம் வாய்ந்த குழு இங்கே உள்ளது, அதன் மூலம் பல வளர்ச்சிப் பணிகளுக்கு பாடுபடுவோம். பொதுமக்கள் எப்போதும் தன்னை தொடர்பு கொள்ளலாம்’ என மாவட்டத்தின் 26 ஆவது ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் டாக்டர் K.செந்தில்ராஜ் தெரிவித்தார்.

You may have missed

error: Content is protected !!
Open chat