December 2, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

குற்றால அருவிகளில் குளிக்க பொதுமக்கள் செல்ல வேண்டாம் தென்காசி ஆட்சியர் எச்சரிக்கை

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 28.10.2020 அன்று தொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த 16.11.20 அன்று சராசரியாக 39.00 மிமீ மழையும், 17.11.20 அன்று மாலை 4.00 வரை சராசரியாக 21.56 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
மேற்படி கன மழை காரணமாக குற்றால அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகின்றது. எனவே பொது மக்கள் நீர்நிலைகள், ஆறுகள், அணைகளில் குளிப்பதற்காக செல்ல வேண்டாம் எனவும் கரையோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வடகிழக்கு பருவமழையினை முழுவீச்சில் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

You may have missed

error: Content is protected !!
Open chat