April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சமக தலைவர் சரத்குமார்

மாற்றம் என்ற பெயரில் மாணவர்களுக்கு மன அழுத்தம் சரத்குமார் வேதனை

கேட்காத கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு. கேட்கும் மாநிலங்களுக்கு விலக்களிக்க மறுப்பு. மத்திய அரசின் பாகுபாட்டு தன்மை வேதனையளிக்கிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 அரசுக் கல்லூரிகளுக்கு, நீட் PG தேர்வில் இருந்து விலக்கு அளித்து, 2021 முதல் செட் என்ற தனிநுழைவுத்தேர்வு கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்திருப்பது வேதனையளிக்கிறது. மத்திய அரசால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மாநில பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அமைய வேண்டும் எனவும், தமிழகத்திற்கு நீட் பொதுத் தேர்வு எழுத உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநிலங்களுக்கேற்ப மாணவர்கள் பாடத்திட்டங்களை பயின்றிருந்தாலும் மருத்துவப்படிப்புக்கென நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு எழுதி தகுதியை நிரூபிக்க வேண்டும் என நீட் பொதுத்தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது.

அவ்வாறு கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு விலக்கு அளித்து தனித்தேர்வு வைப்பது சமதர்மமற்ற செயல். மத்திய அரசு தனது அதிகாரத்தை மாநிலங்கள் மீது திணித்தும், தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அமைப்புகளுக்கு விலக்கு அளித்தும் பாகுபாடு காட்டுகிறது. மாற்றம் என்ற பெயரில் கல்வித்துறையில் தொடர்ந்து ஏதேனும் திருத்தம் செய்து மாணவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் மத்திய அரசு தெளிவான திட்டமிடுதலுடன் அறிவிப்புகளை வெளியிடுவது அவசியம் என கருதுகிறேன்.

இட ஒதுக்கீட்டு முறையையும், மாநில அரசு அதிகாரத்தையும் நீர்த்து போகச் செய்யும் அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் அல்லது பொதுவாக அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும், அதுவே சமநீதியாக இருக்கும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

 

error: Content is protected !!
Open chat