February 26, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை தற்கொலை முயற்சி !?

மறைந்த முன்னாள் சட்ட அமைச்சர் ஆலடி அருணாவின் வாரிசு பூங்கோதை ஆலங்குளம் தொகுதி திமுகவின் நிரந்தர எம்.எல்.ஏ என திமுகவினரால் சொல்லப்படுபவர்
அண்மையில் இவர் பாஜகவில் இணைப் போவதாக செய்தி வந்த்தது இது குறித்து பூங்கோதை தரப்பில் எந்த வித மறுப்பும் முதலில் வரவில்லை பின்னர் இது அவரே தனக்கு கட்சியில் மதிப்பு இல்லாததால் அவரே ஆள் வைத்து செய்தி பரப்புவதாக சொல்லப்பட்ட நிலையில் இதுகுறித்து அவர் அளித்த விளக்கத்தில் அவை அனைத்தும் பொய்யான மற்றும் போலி செய்திகள் அந்த செய்திகளை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் ஒரு போதும் பாஜகவுடன் இணைய மாட்டேன் போலி செய்தியை பரப்பிய தென்காசியை சேர்ந்த பாஜக ஆதரவாளர் மீது கடையம் காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும் கூறினார் ,

மேலும் தற்போது தென்காசி புதிய மாவட்ட செயலாளர் மாற்றத்தில் தனது பெயர் இல்லாததால் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது , இவர் தொகுதிக்குள் இருக்கும் தென்காசி மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனை இவர் கண்டு கொள்வதே இல்லை என்பது திமுக தலைவருக்கே தெரியும் மேலும் தனது தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் கட்சி சார்பாக எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மாவட்டச் செயலாளரை இவர் அழைப்பதில்லை.இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற திமுக கூட்டங்களில் இவருக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என சொல்லப்படுகிறது

மருத்துவமனையின் அறிக்கை

பூங்கோதை எம்.எல்.ஏ தனது உடன் பிறந்த சகோதரன் எழில்வாணன், தென்காசி மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதனுடன் சேர்ந்து அரசியல் செய்து வருகிறார் அண்மையில் ஆலங்குளத்தில் கட்சிக் கூட்டத்துக்கு எழில்வாணன் ஏற்பாடு செய்திருந்தார். அதற்க்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதனையே தலைமை ஏற்கும் படி செய்திருந்தார் , அப்படியிருந்தும் அந்தக் கூட்டத்திலும் பூங்கோதை எம்.எல்.ஏ கலந்துகொண்டார். இப்படி தான் கட்சியில் தொடர்ந்து அவமானப்பட்டு வரும் நிலையில் இன்று அதிக அளவில் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு தற்க்கொலைக்கு முயன்றாதாக சொல்லப்படுகிறது ,
தூக்கம் வராமல் அதிக டோஸ் எடுத்து இருப்பார் என சொன்னாலும் அவர் ஒரு மருத்துவர் அவருக்கு தெரியாதா எத்தனை மாத்திரை சாப்பிட வேண்டும் என்கிற கேள்வியியும் வருகிறது
கீழப்பாவூரில் நடைபெறும் திமுக கூட்டதிற்க்கு வந்த ஆர்.எஸ் பாரதி மருத்துவமனை சென்று பூங்கோதை எம்.எல்.ஏ வை பார்த்து இருக்கிறார் இந்த சம்பவம் தென்காசி திருநெல்வேலி திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது
கட்சிப் பதவிக்காக ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்க்கு செல்வாரா ? என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது

error: Content is protected !!
Open chat