December 5, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி கலெக்டர் அலுவலகம் அரசு மருத்துவமனையை குறிவைக்கும் தமிழக அரசு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

தென்காசி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்டும் இடம் சம்பந்தமாக தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிய கலெக்டர் அலுவலகத்தை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது இதற்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தென்காசி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் கட்டிட தென்காசிபகுதியில் 9 இடங்களை தேர்வு செய்து தமிழக வருவாய் துறை நிர்வாக ஆணையர் இராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் அந்த 9 இடங்களையும் பார்வையிட்டனர் அதன்பின் வருவாய் நிர்வாக ஆணையர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது தென்காசி தலைமையிலான புதிய மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்ட 35 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

தென்காசி மாவட்ட பகுதியில் இதற்காக ஒன்பது இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த இடங்களை நேரில் பார்த்து ஆய்வு செய்ய எனது தலைமையிலான குழு ஒன்பது இடங்களையும் பார்வையிட்டு உள்ளது. இதில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் கலெக்டர் அலுவலகம் கட்ட சாத்தியமில்லை. ஆனாலும் 9 இடங்களும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சரியான இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு கட்டிடம் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசுக்கு சொந்தமான 38 ஏக்கர் நிலம் இருப்பதை கண்டறிந்து அந்த இடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக அந்தப் பகுதியில் சாலை வசதிகள் தெருவிளக்கு வசதிகள் ஒன்பது மாடி கட்டிடங்கள் அதில் ஒவ்வொரு மாடியிலும் என்னென்ன துறை அலுவலகங்கள் வரை இருக்கிறது என்பதையெல்லாம் முடிவு செய்து தமிழக அரசு அதற்காக 119 கோடி ரூபாய் ஒதுக்கி கட்டிட பணி தொடங்க இருந்த நிலையில் திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனால் மேலகரம் பேரூராட்சி பகுதிகள் கட்ட இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கட்டுவதற்கு அரசு முயற்சி எடுத்து வருவதாக தெரிகிறது . 1991 ஆம் ஆண்டு தென்காசி பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுவதற்காக அந்த பகுதியில் கிடந்த அரசுக்குச் சொந்தமான நிலம் 32 ஏக்கரை தமிழக அரசு கையகப்படுத்தியது. அப்போது அந்த இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது.

அப்போது அந்த இடத்தில் சுமார் 7 ஏக்கர் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. மீதம் உள்ள இடத்தில் சுமார் 8 ஏக்கரில் அரசு மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இது நீங்களாக மீதம் உள்ள இடம் 13 ஏக்கர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டு விட்டது.

இப்போது தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என்பது நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறுவதற்காக வரக்கூடிய இடம் இந்த மருத்துவமனை வளாகம் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் அந்த வளாகத்திற்குள் கலெக்டர் அலுவலகத்தை கட்டினால் நாள்தோறும் 500க்கும் அதிகமான வாகனங்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் இதுபோன்ற சம்பவங்கள் நோயாளிக்கு மட்டுமல்ல சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கும் பெரும் இடையூறாக அமையும்.

1996 ஆம் ஆண்டு தென்காசியில் மேம்பாலம் கட்டும் நேரத்தில் ஒரு சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது அன்றைய சட்டமன்ற உறுப்பினர் தென்காசி அரசு மருத்துவமனை வழியாக சர்வீஸ் ரோடு அமைத்துவிட்டால் மேம்பாலம் கட்டும் பணிக்கு இடையூறு வராது என்று முடிவு செய்த நேரத்தில் சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் காரணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை அமைத்து பொது வாகனங்களை அனுமதித்தால் அது நோயாளிகளுக்கு பெரும் இடையூறாக இருக்கும் அவசர நோயாளிகளை உயிர்காக்கும் நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கும் பெரும் இடையூறாக அமைந்துவிடும் எனவே அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள். அதன்படி தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி கைவிடப்பட்டது.

ஆனால் தமிழக அரசு மேலகரம் பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்ட திமுக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் எங்காவது கட்டி விட வேண்டும் என்கிற ஆதங்கத்தில் தென்காசி அரசாங்க மருத்துவமனையை குறி வைத்திருப்பதாக தெரிகிறது இது எதிர்காலத்தில் தென்காசிக்கு அரசு மருத்துவக்கல்லூரி வருவதை தடுத்து விடுவதோடு அரசு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கும் இது பெரும் இடையூறாக இருக்கும்.

மேலும் தென்காசி நகராட்சி பகுதியில் இப்போது நாள்தோறும் ஏற்பட்டு வரும் வாகன நெருக்கடி கலெக்டர் அலுவலகம் இதே தென்காசி தொகுதியில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கட்டப்பட்டால் மேலும் நெருக்கடி பல மடங்கு அதிகரிக்கும் நிலைமை உருவாகும் இதனால் விபத்தில் சிக்கியவர்கள் பிரசவகாலத்தில் மருத்துவமனைக்கு வரும் பெண்கள் உயிர்காக்க மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் செல்வதற்குக் கூட போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி உயிர் பலிகள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் எனவே எந்தக் காரணம் கொண்டும் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தென்காசி மாவட்ட பொதுமக்கள் மருத்துவர்கள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may have missed

error: Content is protected !!
Open chat