November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

பிசான நெல் பயிரினை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தென்காசி ஆட்சியர்அழைப்பு

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிசானம் நெற்பயிரினை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தென்காசி ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் காரீப் 2016 பருவம் முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ததில், விவசாயிகளுக்கு 9 ஆயிரத்து 89 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
காரீப் 2020 முதல் மத்திய அரசின் கொள்கை முடிவின்படி திருந்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டு மானியத் தொகைக்கான மாநில அரசின் பங்கு அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டரூபாய் 721 கோடி தொகையை உயர்த்தி ரூபாய் 1470 கோடி தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய திட்டத்தின்படி தென்காசி மாவட்டத்திற்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்தும்.
தற்போது ராபி சிறப்பு பருவம் 2020-2021க்கான அறிவிக்கை செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிசான நெல் காப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. பிசான நெல் காப்பீடு செய்ய இந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகும்.

பிசான நெற்பயிர் சாகுபடி தென்காசி மாவட்டத்தில் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மாவட்;டத்தில் தற்போது மிதமான முதல் கனமழை பெய்து வரும் நிலையில் பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே இதுவரை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் வங்கிகள்அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்ஃவிதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். பயிர் காப்பீட்டுத் தொகையில், விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதுமானது. அதாவது ஏக்கருக்கு ரூ.444 மட்டும் பிரீமியம் செலுத்த வேண்டும்.

எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களை இந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்டாக்டர்ஜி.எஸ்.சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!
Open chat