November 26, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

தென்காசி அருகே உள்ள கொட்டாக்குளம் நித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் ஆர்வலா் குழு உறுப்பினா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை, மாநில வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் தென்காசி வட்டாரம் பிரானுார் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஆர்வலா் குழு உறுப்பினா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. தென்காசி வேளாண்மை உதவி இயக்குநா் கனகம்மாள் ஆலோசனையின்பேரில் நடந்த இந்த பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் சங்கரநாராயணன் வரவேற்று பேசினார்.

மேலும் விவசாயிகள் ஆர்வலா் குழு முக்கியத்துவத்தை மற்றும் கூட்டுப் பண்ணையம் குறித்து எடுத்துக் கூறினார். துணை வேளாண்மை அலுவலா் திவான்பக்கீர்முகைதீன் வேளாண்மை திட்டங்கள், மற்றும் நெற்பயிருக்கு பயிர் பாதுகாப்பு காப்பீடு செய்வது குறித்தும் மகளிர் திட்ட சமூக வல்லுநா் ராகினி குழு பதிவேடுகளை பராமரிப்பது குறித்தும், குழு வழி நடத்தும் முறைகள் குறித்தும் உதவி வேளாண்மை அலுவலா் சபரிராஜா நுண்ணீர் பாசனம் குறித்தும் விளக்கவுரை ஆற்றினா்.

இப்பயிற்சியில் ஆர்வலா் குழு உறுப்பினா்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனா். முடிவில் உதவி தொழில் நுட்ப மேலாளா் நாகராஜன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளா் நாகராஜன் மற்றம் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனா்.

You may have missed

error: Content is protected !!
Open chat