November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கணக்கப்பிள்ளை வலசை – வல்லம் ஊராட்சி பகுதிகளில் தென்காசி கலெக்டர் ஆய்வு

தென்காசி ஊராட்சி ஒன்றியம் கணக்கப்பிள்ள வலசை மற்றும் வல்லம் ஊராட்சி பகுதிகளில் தென்காசி கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்காசி ஊராட்சி ஒன்றியம் கணக்கபிள்ளை வலசை ஊராட்சி ராஜபுரம் காலனி, மற்றும் வல்லம் ஊராட்சி பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள வீடுகளை தென்காசி கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் கணக்கப்பிள்ளை வலசை வல்லம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மத்திய மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தென்காசி கலெக்டர் டாக்டர் ஜி.எஸ் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி ராஜபுரம்காலனி மற்றும் வல்லம் ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலெக்டரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அப்போது பொதுமக்களிடம் கலெக்டர் அவர்களது தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். அதற்கு பொதுமக்கள் தங்கள் ஊராட்சி பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்து தருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் சரவணன், செயற் பொறியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர் குமரேசன், தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) வெ.சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கருப்பசாமி ஒன்றிய பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வின், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பையா ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஜெயலட்சுமி, கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி செயலாளர் கே.வேம்பையா, வல்லம் ஊராட்சி செயலாளர் எம்.இசக்கிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Attachments area

error: Content is protected !!
Open chat