November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சிவகிரி பகுதி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்

சிவகிரி பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம்
சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கூடாரப்பாறை பாலசுப்பிரமணியர் கோவில் , கூடலூர் அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோவில் உட்பட முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 15ஆம் தேதிகொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் அபிஷேகம் செய்து தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. சப்பரத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசாமி உலா கோயில் வளாகத்தில் நடைபெற்றது. நவம்பர் நேற்று மாலையில் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டு கோயில் வளாகத்துக்குள்ளேயே வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று மாலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோயில் அடிவாரத்தில் வசந்த மண்டபம் அருகில் நடைபெற்றது. முருகப் பெருமான் முதலில் யானை தலையுடன் வந்த சூரனையும் அடுத்து சிங்க முகத்துடன் வந்த சூரனையும் வதம் செய்தார். இறுதியில் மகா சூரனான சூர பத்மநாதனை வதம் செய்தார்.

பின்னர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் ராணி பாலகுமாரிநாச்சியார், ராஜா சேவுகப்பாண்டியன் (எ) விக்னேஷ்வர சின்னத்தம்பியார், கோவில் குருக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

நாளை (21ம் தேதி ) கோயில் வளாகத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது

இதேபோன்று கூடலூர் அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது .

error: Content is protected !!
Open chat