November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி மாவட்டத்தில் நடப்பு ரபி பருவத்தில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி, சோளம், கரும்பு, நெல்-III, வாழை, வெங்காயம், மிளகாய் பயிர்களை காப்பீடு செய்ய திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழுக் கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான இணைக்குழுக் கூட்டம்,
வேளாண்மை உற்பத்திக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கீ.சு.சமீரன், இ.ஆ.ப தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருந்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு பிரிமியம் செலுத்த உளுந்து, பாசிப்பயறு பயிர்களுக்கு 30.11.2020 கடைசி நாளாகவும் மக்காச்சோளம் பயிருக்கு 16.12.2020 கடைசி நாளாகவும், சோளம் பயிருக்கு 21.12.2020 கடைசி நாளாகவும், நிலக்கடலை பயிருக்கு 20.01.2021 கடைசி நாளாகவும், மிளகாய் பயிருக்கு 30.01.2021 கடைசி நாளாகவும், வாழை பயிருக்கு 01.02.2021 கடைசி நாளாகவும், நெல்III, (கோடை நெல்)வெங்காயம் பயிh;களுக்கு 15.02.2021 கடைசி நாளாகவும், பருத்தி பயிருக்கு 16.03.2021 கடைசி நாளாகவும், கரும்பு பயிருக்கு 31.10.2021 கடைசி நாளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இயற்கை சீற்றம் ஏதும் ஏற்பட்டு அதிக அளவு சேதம் ஏற்பட்டால் கடைசி நாளுக்கு முன்னரே காப்பீடு பதிவினை நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது.

எனவே கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதிகபட்ச காப்பீடு இழப்பீடு தொகை ஏக்கர் ஒன்றுக்கு நெல் பயிருக்கு ரூ.29,600/- எனவும், மக்காச்சோளம் பயிருக்கு ரூ.17,900/- எனவும், உளுந்து, பாசிப்பயறு பயிருக்கு ரூ.16,550/- எனவும், நிலக்கடலை பயிருக்கு ரூ. 20,500/- எனவும், சோளம் பயிருக்கு ரூ.11,200/- எனவும், கரும்பு பயிருக்கு ரூ.52,000/- எனவும், பருத்தி பயிருக்கு ரூ.9,936/- எனவும், வாழை பயிருக்கு ரூ.65,000/- எனவும், வெங்காயம் பயிருக்கு ரூ.20,400/- எனவும், மிளகாய் பயிருக்கு ரூ.21,500/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் ஏக்கர் ஒன்றுக்கு நெல் பயிருக்கு ரூ.444/- எனவும், மக்காச்சோளம் பயிருக்கு ரூ.269/- எனவும், உளுந்து மற்றும் பாசிப்பயறு பயிர்களுக்கு ரூ.248/- எனவும் நிலக்கடலை பயிருக்கு ரூ.308/- எனவும், சோளம் பயிருக்கு ரூ.168/- எனவும், கரும்பு பயிருக்கு ரூ.2,600/- எனவும், பருத்தி பயிருக்கு ரூ.497/- எனவும் வாழை பயிருக்கு ரூ.3250/- எனவும், வெங்காயம் பயிருக்கு ரூ.1020/- எனவும் மிளகாய் பயிருக்கு ரூ.1075/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுளள்து.

விவசாயிகள் பிரிமியம் தொகையினை பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, வங்கிகளிலோ செலுத்தலாம். அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் உடனடியாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு நல்லமுத்து ராஜா, தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், மற்றும் விவசாயிகள் கொண்டனர்.

error: Content is protected !!
Open chat