November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் தென்காசி ஆட்சியர் தகவல்

கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

2021ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் தகுதியுடையோருக்கு வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தை பெறத் தகுதியுடையவராவர்.

மேலும் இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சேர்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

மேலும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணயதள முகவரியான
http://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in
மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது அண்ணா விளையாட்டரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். 2021ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அனைத்தும் 4 நகல்கள் மற்றும் தற்போது எடுத்த பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், (தென்காசி கூடுதல் பொறுப்பு), எண் 15/A, புனித தாமஸ் ரோடு, அண்ணா விளையாட்டரங்கம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி- 627 002 என்ற முகவலியில் வருகின்ற 26.11.2020க்குள் அலுவலக நேரத்தில் சமர்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்கள் பெற 0462-2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat