November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சிவகிரியில் மழையில் வீடுகளை இழந்த இருவருக்கு அரசு நிவாரண நிதிஉதவி

சிவகிரியில் மழையில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. வீட்டை இழந்த இரண்டு குடும்பத்தினருக்கு அரசு நிவாரண நிதியை வட்டாட்சியர்ஆனந்த் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி பாகம் 2 கிராமம் காமராஜர் கீழத்தெருவில் வசிக்கும் வெள்ளைச்சாமி மகன் மும்மூர்த்தி, துரைராஜ் பாண்டியன்மகன் செல்வராஜ் ஆகிய இருவரின் வீடுகள் தொடர்மழையால் இடிந்து விழுந்தன.
மழையில் வீட்டை இழந்த இரண்டு குடும்பத்தினருக்கும் தலா ரூ.4,100க்கான வங்கி காசோலையை அரசின் நிவாரண நிதியாக சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Open chat