November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசியில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு

தென்காசியில் வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டத்தில்  சங்கரன்கோவில்(தனி), வாசுதேநல்லூர் (தனி) கடையநல்லூர், தென்காசி மற்றும் ஆலங்குளம் ஆகிய ஐந்து சட்டமன்ற  தொகுதிகள் அடங்கியுள்ளன.  கடந்த 14.02.2020 அன்று வெளியிடப்பட்ட  வாக்காளர் பட்டியலின் படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,03,308 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 6,40,488, பெண்  வாக்காளர்கள் 6,62,764, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 56 நபர்கள் உள்ளனர். அதன்பின் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதில் 31.10.2020 முடிய 3,438 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு 15,065 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேற்கண்டவாறு சேர்க்கை மற்றும் நீக்கம் செய்யப்பட்ட பின் மொத்த வாக்காளர்கள் 12,91,681 ஆகும்.  இதில் ஆண் வாக்காளாகள் 6,34,450, பெண் வாக்காளர்கள் 6,57,191, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 40 நபர்கள் உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி நவம்பர் மாதம்; 22.11.2020-ம் தேதியிலும், டிசம்பர் மாதம் 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய  தேதிகளிலும் வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.  01.01.2021-ஐ தகுதி நாளாகக் கொண்டு மேற்படி தேதி அன்று பதினெட்டு வயது பூர்த்தி அடைபவர்களும், விடுபட்ட வாக்காளர்களும், தங்கள் பெயர்களைச் சேர்க்க படிவம் 6-ம், நீக்கம் செய்ய படிவம் 7-ம், திருத்தம் செய்ய படிவம் 8-ம் மற்றும் ஒரே தொகுதிக்குள் மாற்றம் செய்ய படிவம் 8A-ம் அந்தந்த வாக்கு சாவடி அமைவிடங்களில் பெற்ற பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.  மேலும்  www.nvsp.in  என்ற தேர்தல் ஆணைய இணைய தளத்திலும் பதிவு செய்யலாம்.இந்நிலையில் இன்று தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மேற்கொள்ளும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
.

error: Content is protected !!
Open chat