November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

7 பேர் விடுதலை – தமிழக ஆளுநர் மெளனம் சாதிப்பது மனிதாபிமானமற்ற செயல் சரத்குமார் வேண்டுகோள்

7 பேர் விடுதலை – தமிழக ஆளுநர் மெளனம் சாதிப்பது மனிதாபிமானமற்ற செயல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வேண்டுகோள் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைதான சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் 30 ஆண்டுகளாக சிறையில் தவித்து வரும் நிலையில், அவர்களை விடுவிக்கும் அதிகாரம் பெற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் மெளனம் சாதிப்பது மனிதாபிமானமற்ற செயல்.

அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென 06.09.2018 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாக 7 பேர் விடுதலை பற்றிய தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஏற்போ, மறுப்போ தெரிவிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வது வருந்தத்தக்கது. பேரறிவாளனை விடுவிக்க அவரது தாய் அற்புதம்மாள் 30 ஆண்டுகளாக நடத்தும் சட்டப்போராட்டத்தையும், வடிக்கும் கண்ணீரையும் கண்டும் ஆளுநர் மனம் இறங்காதது வேதனையளிக்கிறது.

குறிப்பாக இக்கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்க முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குடும்பத்தினரே ஆட்சேபனை தெரிவிக்காத போது, அரசியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டு, பாகுபாடின்றி மனிதாபிமான அடிப்படையிலும், 30 ஆண்டுகள் சிறையில் வாடிய தமிழர்கள் மீதான கருணை அடிப்படையிலும் உடனடியாக பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநர் உத்தரவு பிறப்பிக்குமாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்

error: Content is protected !!
Open chat