நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் மழையினால் சேதமடைந்த நியாயவிலைக் கடைகளை பார்வையிட்ட மாநகராட்சி உதவி ஆணையர் நெல்லை மாநகராட்சி 5வது வார்டு நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளின் கட்டிடங்கள் மோசமான நிலையில் காணப்பட்டு வந்தது.
எனவே இந்த இரண்டு கடைகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் பரணி சங்கரலிங்கம் ஆகியோர் நெல்லை மாநகராட்சி ஆணையரிடம் நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர் இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணம சிந்துபூந்துறையில் உள்ள இரண்டு நியாய விலை கடைகளின் மேற்கூரை சிதலமடைந்து காணப்பட்டதால் அதன் வழியாக தண்ணீர் உள்ளே நுழைந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் மழை நீரில் நனைந்து நாசமாகி விட்டது.
இந்நிலையில இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி உதவி ஆணையாளர் ஐயப்பன் மற்றும் அதிகாரிகள் சிந்துபூந்துறையில் உள்ள இரண்டு நியாய விலை கடைகளிலும் நேரில் சென்று பார்வையிட்டனர். ரேஷன் கடைகளை எதிரே உள்ள மருத்துவமனை வளாகத்திற்கு தற்காலிகமாக இட மாற்றம் செய்யலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆய்வின் போது நெல்லை மாநகர் மாவட்ட அவைத் தலைவரும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான பரணி சங்கரலிங்கம் 5வார்டு செயலாளர் முத்துராஜ் தச்சை பகுதி இளைஞரணி துணை தலைவர் நல்லபெருமாள் சீதாராமன் ஆட்டோ குமார் தங்க பிச்சையா உதயசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
More Stories
“விசாகா கமிட்டி” அமைக்காதது பெண் காவலர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது”
ஆட்டோவை பறிமுதல் செய்ததால் நெல்லையில் நிதி நிறுவனம் முன்பு டிரைவர் தீக்குளித்து தற்கொலை
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது