November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சிவகிரி அருகே உடும்பு வேட்டை 3 பேர் கைது: வனத்துறையினர் அதிரடி

சிவகிரி வனப்பகுதிக்குள் உடும்பு வேட்டையாடிய 3 பேர்களை வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள வனப்பகுதிக்குள் அடிக்கடி மர்ம நபர்கள் புகுந்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவது வாடிக்கையாகி விட்டது. கடந்த 8 மாதங்களில் மட்டும் வேட்டைக்குச் சென்ற கும்பல்களை வனத்துறையினர் கைது செய்து அவர்களுக்கு ரூ.20 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதித்துள்ளனர்.

இந்நிலையில் சிவகிரி வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிவகிரி வனரேஞ்சர் டி.சுரேஷ், தலைமையில் சிவகிரி வனவர்கள் வடக்கு பிரிவு பி.முருகன், தெற்கு பிரிவு ம.பூவேந்தன், வனக்காப்பாளர்கள் ராஜூ, இம்மானுவேல், பாரதிகண்ணன், வனக்காவலர் அருண்குமார், வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஆனந்தன், பாலசுப்பிரமணியன், மாரியப்பன், சரவணன் ஆகியோர் சிவகிரி; வடக்கு பிரிவு தேவியார் பீட் வனப்பகுதியில ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு உடும்பு வேட்டையாடிய தேவிபட்டணம் கிராமம் மணல் மேட்டுத் தெருவைச் சேர்ந்த பொன்னுத்தேவர் மகன் முருகன் (வயது 40), ஆறுமுகம் மகன் அய்யனார் (19), காமாட்சி மகன் கண்ணன் (19) ஆகிய 3 பேர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து அரியவகை உடும்பு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த உடும்பு மரபட்டை, மரப்பொந்து, மண் ஆகியவற்றில் மட்டும் வசிக்கக்கூடியதாகும்.

இதுகுறித்து சிவகிரி வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேர்களையும் சிவகிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அம்மூவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அம்மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!
Open chat