November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சிவகிரி லேத்பட்டறையில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு

சிவகிரி லேத்பட்டறைக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
சிவகிரி சோதனைச்சாவடி அருகேயுள்ள லேத் பட்டறை ஒன்றில் மலைப்பாம்பு புகுந்துள்ளது. இதனால் லேத் பட்டறைக்குள் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியேறினர். இதுகுறித்து சிவகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனவர்கள் முருகன், பூவந்தன், வனக்காப்பாளாகள்; ராஜு, இம்மானுவேல், பாரதிகண்ணன், வனக்காவலர் அருண்குமார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று லேத் பட்டறையை சல்லடை போட்டு தேடி மலைப்பாம்பை பிடித்தனர்.

பிடிபட்ட மலைப்பாம்பு 12 அடி நீளம் உடையதாக இருந்தது. கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக சிவகிரி பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் மலைப்பாம்பு இழுத்து வரப்பட்டு லேத் பட்டறைக்குள் புகுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

வனத்துறையினர் மலைப்பாம்பை கோம்பையாறு சுனைப்பாறை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

error: Content is protected !!
Open chat