November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார விழா

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார விழா 15.11.20 முதல் 21.11.20 வரை கொண்டாடப்பட்டது .

இதில் முதல் நாள் மகப்பேறு மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு தாய் பால் , குழந்தை வளர்ப்பு பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது . இரண்டாம் நாள் தாய்மார்களுக்கு வினாடி வினா , மூன்றாம் நாள் செவிலியர் பங்கு பெற்ற பச்சிளம் குழந்தை பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
விழாவின் இறுதி நிகழ்ச்சியில் மருத்துவமனை இணை இயக்குனர் மரு. நெடுமாறன் , கண்காணிப்பாளர் மரு. ஜெஸ்லின், முன்னாள் இணை இயக்குனர் மரு கிருஷ்ணன்,‌மகப்பேறு துறை மருத்துவர் அணிதபாலின், செவிலியர் கண்காணிப்பாளர் மேரி, குழந்தை நல துறை மருத்துவர்கள் கீதா, பாபு மற்றும் பிற மருத்துவர்கள் கலந்து கொண்டனர் .விழாவில் சுமார் 100 தாய்மார்கள் கலந்து கொண்டனர் .இதில் பங்கேற்ற தாய்மார்கள்,செவிலியர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

error: Content is protected !!
Open chat