January 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 10 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜலெட்சுமி நிதியுதவி

தென்காசி மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவ கல்லூரி மாணவ,மாணவிகள் 10 பேருக்கு மானியமாக தலா ரூ.ஒரு லட்சம் மற்றும் மருத்துவ கல்லூரி உபகரணங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூhயில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவ,மாணவிகளை ஊக்குவிப்பதற்காகவும் அவர்களை போன்று பிற மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெறுவதை ஊக்குவிப்பதற்காகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி; தனது சொந்த தலா ரூ.ஒரு லட்சம்,முதலாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் மருத்துவ உபகரனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் முன்னிலையில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி),அ.மனோகரன் (வாசுதேவநல்லூர்)மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சுகுணா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!
Open chat