January 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசியில் 7 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியத்தொகை வழங்கிய அமைச்சர் ராஜலெட்சுமி

தென்காசி, நவ. 23-

தென்காசியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட 7 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனத்திற்கான மானியத்தொகைக்கான காசோலையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி வழங்கினார்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடந்த விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி தலைமையில்,மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் முன்னிலையில் 7 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனத்திற்கான மானியத்தொகைக்கான காசோலையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி),அ.மனோகரன் (வாசுதேவநல்லூர்),மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சுகுணா சிங் மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Open chat