January 16, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கடையத்தில் தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகன் கைது

தென்காசி மாவட்டம்,கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு கடையம் தெற்கு மாசி வீதியில் வசித்து வந்த கிருஷ்ணன் என்பவரின் மகனான தங்கராஜ் (66) என்பவர் முதல் திருமணம் செய்து நான்கு குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்து தற்போது தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.தங்கராஜ் வைத்திருந்த 40 ஏக்கர் சொத்தில் தனது முதல் மனைவிக்கு 15 ஏக்கரும் இரண்டாவது மனைவிக்கு 25 ஏக்கரும் பிரித்துக் கொடுத்துள்ளார்.தனது சொத்தின் பங்கை அதிகமாக இரண்டாவது மனைவிக்கு கொடுத்ததால் தங்கராஜ் மற்றும் அவரின் முதல் மனைவியின் குடும்பத்திற்கும் பேச்சுவார்த்தை கிடையாது கடந்த வாரம் தனது முதல் மனைவியின் மகன் இறந்த இறுதி சடங்கிற்கு கூட தங்கராஜ் செல்லாமல் இருந்துள்ளார்.

.தனது இரண்டாவது மனைவிக்கு கொடுத்த நிலத்தின் வழியாக தான் முதல் மனைவிக்கு கொடுத்த நிலத்திற்கு செல்ல வேண்டிய வழிப்பாதை இருந்ததால் தங்கராஜ் மற்றும் அவரின் முதல் மனைவியின் மகனான குமரன் (42) ஆகியோருக்கு இடப் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் 26.11.2020 அன்று குமரன் தனது வயலில் இருந்து வைக்கோல் கட்டை கொண்டு செல்லும் போது தனது நிலத்தின் வழியாக வரக்கூடாது என்று அவரின் தந்தையான தங்கராஜ் வழிமறித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

,நேற்று 27.11.2020 மீண்டும் மாலை 4 மணியளவில் வைக்கோல் கட்டை குமரன் அந்த நிலத்தின் வழியாக கொண்டு வந்ததால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த குமரன் தனது தந்தையான தங்கராஜ் என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக தங்கராஜின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடையம் காவல் நிலையத்தில் தங்கராஜன் இரண்டாவது மனைவி சண்முக சுந்தரி (41) கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ரெகுராஜன் விசாரணை மேற்கொண்டு மேற்படி குமரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்..

error: Content is protected !!
Open chat