January 16, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசியில் டிச.23 முதல் ஜன.1 வரை புத்தகத்திருவிழா

தென்காசியில் டிசம்பர் 23 ல் தொடங்கி ஜனவரி 1 வரை 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவின் ஆலோசனை கூட்டம் தென்காசி எம்கேவிகே பள்ளியில் வைத்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் க.ஆடிவேல் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்காசி மாவட்ட செயலாளர் ஆசிரியர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், ஆகியோர் விளக்க உரை உரையாற்றினர். சக்தி மதுபோதை மையத்தின் நிறுவனர் டாக்டர் அறிவழகன் வாழ்த்துரை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை புத்தகத் திருவிழாவை தென்காசி ரோட்டரி கிளப், தென்காசி பத்திரிகையாளர் சங்கம், நூலக துறையுடன் இணைந்து சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் வைரவன் ராமசுப்பிரமணியன் ரோட்டரி கிளப் பொறுப்பாளர்கள் நூலகர் ராமசாமி தென்காசி பத்திரிக்கையாளர்கள் ஏஜிஎம் கணேசன் தங்கராஜ் புதிய செல்வம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
முடிவில் சுரேஷ் ஜான் கென்னடி அனைவருக்கும் நன்றி கூறினார்.

error: Content is protected !!
Open chat