January 16, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக குமார்பாண்டியன் நியமனம்

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளராக குற்றாலம் கே.பி. குமார் பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு தலைவராக எம்.செல்லத்துரை பாண்டியன், துணைத் தலைவர்களாக மருக்காலங்குளம் கே.செல்லத்துரை, தென்காசி கே.ரெங்கராஜ் ஆகியோரும், தென்காசி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளராக முன்னாள் அதிமுக மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் குற்றாலம் பேரூராட்சி தலைவருமான குற்றாலம் கே.பி. குமார் பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்களாக ஆலங்குளம் பி சுப்பையா, வாடியூர் எஸ் ராமச்சந்திரன், தென்காசி பி.வி. கண்ணன், ஆலங்குளம் எஸ்.எஸ்.என் சொக்கலிங்கம், மேலகரம் எஸ்.சின்னத்துரை பாண்டியன், தென்காசி எஸ். சிவகுமார், ஆலங்குளம் சாந்தகுமார், ஆகியோரும்,

மாவட்ட துணைச்செயலாளர்களாக ஆழ்வார்குறிச்சி ஏ‌.வேல் மணிகண்டன், வெண்ணிலிங்கபுரம் எம்.சண்முகசுந்தரம், தெற்கு மடத்தூர் இராஜசேகர், குலையநேரி ஏ.கணேசன், தென்காசி கே.இசக்கி ராஜ், சிவலார்குளம் எஸ்.ரவி, பாவூர்சத்திரம் பி.பாஸ்கர், கிடாரக்குளம் எம்.சேர்மக்கனி, குணராமநல்லூர் ஜோதிமுருகன்(எ) சரவணன், தெற்கு மடத்தூர் பி.ராஜேஷ் கண்ணா, கீழப்பாவூர் எம்.ராம்குமார் ஆகியோரும், பொருளாளராக அடைச்சாணி எம்.காந்திமதிநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.செல்வ மோகன் தாஸ் பாண்டியன் எம்எல்ஏ மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

error: Content is protected !!
Open chat