April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தேனியில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு பணி வழங்கக்கோரி ஆர்பாட்டம்.

தேனி நகரில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பங்களா மேட்டில், கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு தமிழகஅரசு பணி பாதுகாப்பு வழங்கிடக் கோரி பிரேம் குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கொரோனா காலத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் மூலம் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பணிக்கு செவிலிய பட்டயபடிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு படித்த சுமார் 400க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டு பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்துடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். இது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய எங்களை மீண்டும் தொடர்ந்து பணிபுரிவதற்கு வழிவகை செய்யக் கோரி சுகாதாரத்துறை அதிகாரிகள் கோரிக்கை மனு அளித்து இருந்தோம். ஆனால் இதுவரையிலும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் நாங்கள் போராட்டத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளோம். எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற கோரி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!
Open chat