உலக எய்ட்ஸ் தினம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் அனுசரிக்கப்பட்டது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக எய்ட்ஸ் தினம் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு இ.ஆ.ப. தலைமையில் இணை இயக்குனர் நலப்பணிகள் மரு.நெடுமாறன் முன்னிலையில் அனுசரிக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலி மாவட்டத்தில் எச்ஐவி பரிசோதனை கண்டறிய 64 நம்பிக்கை மையங்களும், 4 சுகவாழ்வு மையங்களும், 2 அரசு ரத்த வங்கிகளும் 6 தனியார் ரத்த வங்கிகளும், 1 ஏஆர்டி மையமும் ஒரு இலவச சட்ட உதவி மையமும் செயல்பட்டு வருகிறது என்றும் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு 7364 நபர்கள் கூட்டு மருந்து சிகிச்சை ஏஆர்டி மையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளனர் என்றும் இவர்களில் 260 நபர்களுக்கு குடும்ப அட்டையும் 650 நபர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையும் 1232 நபர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்ட உதவி தொகையும் 318 நபர்களுக்கு விதவை உதவித் தொகையும் 29 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகையும் 8 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்
புதிய எச்ஐவி தொற்று இல்லாத எச்ஐவி தொற்று உள்ளவர்களை புறக்கணிப்பு செய்யாத மற்றும் எய்ட்ஸ் தொடர்பான இழப்புகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பாளர் இந்திய அளவில் எச்ஐவி எய்ட்ஸ் இன் தாக்கம் 57 சதவீதம் வரை 15 முதல் 45 வயதினரிடையே புதிய எச் ஐ வி தொற்று ஏற்படாமல் குறைக்கப்பட்டுள்ளது என்றும் இனி திருநெல்வேலி மாவட்டத்தில் எச்ஐவியால் எந்த ஒரு நபரோ குடும்பமோ அல்லது குழந்தைகளை பாதிக்கப்படக்கூடாது என்ற உறுதியுடன் அனைவரும் என்று செயல்பட வேண்டும் என்று கூறினார் மேலும் 2030 ஆம் ஆண்டிற்குள் பூஜ்ஜியத்தை நோக்கி என்ற தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் இலக்கை அடைய மக்களிடையே இந்நோய் குறித்த விழிப்புணர்வையும் நோய் பாதித்தவர்களுக்கு புரிதலோடு கூடிய அரவணைப்பும் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அனைத்து அரசு மற்றும் அரசு சாரா துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்
உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவர்கள் பணியாளர்கள் பயனாளிகள் என அனைவரும் ஏற்றுக்கொண்டனர் அதனைத் தொடர்ந்து எய்ட்ஸ் தொடர்பாக கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார் பின்னர் நடைபெற்ற சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்டார்.
More Stories
பாவூர்சத்திரம் எம்.கே.வி.கே பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது
விரைவில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு
அ.தி.மு.க.வுக்கு அறிவுரை கூற குருமூர்த்தி யார்? வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி