May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

மதுரையில் ரூ1295 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம் அடிக்கல் நாட்டினார் – முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து 1295 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, 69 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 12 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி நிர்வாக ஆணையர் டாக்டர் கே. பாஸ்கரன், இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்
த. அன்பழகன், இ.ஆ.ப., மதுரை மாநகராட்சி ஆணையர் ச. விசாகன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்

error: Content is protected !!
Open chat