இந்திய மருத்துவத் துறைக்கான சிறந்த தன்னலமற்ற கொரோனா மேலாண்மைக்கான இந்திய மருத்துவ ஆயுஷ் விருது தென்காசி அரசு சித்த மருத்துவர் கலாவிற்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.
உலக தமிழ் வர்த்தக கழகம், தமிழ்நாடு இந்திய மருத்துவத்துறை, தேசிய சித்த மருத்துவ கழகம், மத்திய சித்த ஆசராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து உலக அளவில் சித்த மருத்துவத்தின் மூலம் கொரோனா மேலாண்மையில் தன்னார்வலராக திறம்பட பணியாற்றிய சிறந்தவர்களுக்கு இந்திய மருத்துவ ( ஆயூஷ் எக்ஸலன்ஸ் 2020)விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தெலுங்கான ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை வகித்தார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். உலக தமிழ் வர்த்தக நிறுவன தலைவர் ஜெ.செல்வகுமார் வரவேற்று பேசினார்.
துமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருததுவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் எஸ்.கணேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில்
தென்காசி சித்த மருத்துவர் கலா கொரோனா காலத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்கும், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நிலவேம்பு, கபசுரக் குடிநீர் போன்ற மூலிகை மருத்துவம் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பம் அவர்களோடு தொடர்புடையவர்கள் என்று கண்காணித்து அவர்களுக்கு, தகுந்த முறையில் சித்தமருத்துவ நெறிமுறைகளை கையாண்டும், கொரானா பரவலை தடுத்தும் தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவமனையோடு இணைந்து, ஆங்கில மருத்துவத்தோடு இணைந்து, சித்தமருத்துவ முறையையும் இணைத்து கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி ஆய்வு நோக்கில் செயல்பட்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் தன்னலமற்று சேவையாற்றியுள்ளார்.
மருத்துவர் கலாவின் மருத்துவ சேவையை பாராட்டி அவருக்கு தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆயுஷ் விருது வழங்கினர். விருது பெற்ற மருத்துவர் கலாவிற்கு தென்காசி மாவட்ட மருத்துவத்துறையினர், பொதுமக்கள், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்