தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவரும் பொதுச்செயலாளருமான
கேப்டன் விஜயகாந்த் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின்
கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சம்பந்தப்பட்ட அமைச்சர், பிரதமர் உள்ளிட்டோரை சந்திக்க வரும் விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காததால்தான் உலக நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் டெல்லியை சுற்றி மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இனியும் மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக விவசாயிகளின் பிரச்சனையில் கவனம் செலுத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இது விவசாயிகள் பூமி, விவசாயிகளின் குறைகளை தீர்க்காமல் இந்தியா வல்லரசாக மாற முடியாது, இந்தியாவின் முதுகெலும்பே விவசாயமும் விவசாயிகளும்தான். எனவே விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தனது கடிதத்தில் குறிபிட்டுளார்
More Stories
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
திருச்சி விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்த மழை!
நாகை மாவட்டத்தில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை