January 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

விவசாயிகளுக்கு ஆதரவாக பால் முகவர்கள் நலச் சங்கம் ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரியும், தலைநகர் டெல்லியில் போராடும் விவசாய பெருமக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராகப் போராடும் விவசாய பெருமக்களை தேச விரோத சக்திகளாக சித்தரிப்பதை கண்டித்தும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் மாபெரும் கண்டன அறவழி ஆர்ப்பாட்டம் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையிலும், மாநில பொதுச் செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன், மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.குமார், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் எம்.சக்திவேல், மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.முருகன், மாநில துணைத் தலைவர் ஓ.ஈ.மகேந்திரவர்மன், மாநில இணைச் செயலாளர் நா.குமார், மாநில துணைச் செயலாளர் எஸ்.பால்துரை, இளைஞரணி செயலாளர் கு.ராகுல் ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் “இயற்கை வேளாண் விஞ்ஞானி” டாக்டர். ஜி.மயில்சாமி கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைக்க, பொதுச் செயலாளர்கள் A.G.மெளரியா ஐபிஎஸ் ஓய்வு,.C.K.குமாரவேல், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம், இளைஞரணி மாநில செயலாளர் கவிஞர் சினேகன் ஆகியோரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் சாமுவேல் ஆகியோரும், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சென்னை மண்டல தலைவர் வி.கே.வி.துரைசாமி , SVS – AAP ஆம் ஆத்மி தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் சுவாமி எம்.ஆர் காக்கை அறக்கட்டளையின் தலைவர் வி.மணிகண்டன்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்க பேரவையின் மாநிலத் தலைவர் G.கிரிதரன், துணைத் தலைவர் அசோக் G.லோதா, பொதுச் செயலாளர் வே.கோபிநாத் சென்னை மண்டல செயலாளர் S.ஈஸ்வரன் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.அப்துல் ஷபீக் அகில தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் பா.ஆல்பின் மனோ அவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இறுதியில் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.ஜெயச்சந்திரன் நன்றியுரை நிகழ்த்தினார்.

You may have missed

error: Content is protected !!
Open chat