April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

திறன் மேம்பாட்டு பயிற்சி பெற இந்து ஆதிதிராவிட மாணவ/மாணவிகள் விண்ணப்பிக்கலாம் தென்காசி ஆட்சியர் தகவல்

இந்து ஆதிதிராவிட மாணவ/ மாணவிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தாட்கோ மூலமாக இந்து ஆதிதிராவிட மாணவ / மாணவிகளுக்கு 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கட்டணம் இல்லாமல் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் வேலு சமூக செயல் பொது அறக்கட்டளை, 113, ராஜாகோபுரம் கட்டிடம், இ.விலக்கு, இலத்தூர், தென்காசி மூலம் நகை சில்லறை மதிப்பீட்டாளர் மற்றும் மதிப்பீட்டாளர், உதவி பேஷன் டிசைனர், சுயதொழில் தையல் ஆகிய 3 பயிற்சி அளிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சில நிறுவனங்களுக்கு பயிற்சி ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

பயிற்சி பெற சென்று வருவதற்கான அனுமதிக்கப்பட்ட படிகளும் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, பயிற்சியில் சேர விரும்பும் இந்து, ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவ/மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பயிற்சி முடித்தவுடன் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க மற்றும் வேலை வாய்ப்பு வழங்கிட ஆவண செய்யப்படும்.

இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகம், ஏ.ஆர்.லைன் ரோடு, இலந்தகுளம், பாளையங்கோட்டை என்ற முகவரியில் நேரில் அணுகியோ அல்லது 0462-2561012 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது கைபேசி எண்.9445029481 (ம) 9444127517 களிலோ அல்லது மேற்கண்ட பயிற்சி நிறுவன முகவரியை நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat