January 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி மாவட்டத்தில் 17ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்மாவட்டத்தில் 17ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் வரும் 17ம் தேதி)மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.

டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருகின்ற 17.12.2020 அன்று காலை 11 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்; தலைமையில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இதர துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டார விவசாயிகள் தென்காசி, வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார விவசாயிகள் கடையநல்லூர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், கடையம், கீழப்பாவூர், ஆலங்குளம் வட்டார விவசாயிகள் கீழப்பாவூர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், சங்கரன் கோவில், மேலநீலிதநல்லூர் வட்டார விவசாயிகள் சங்கரன் கோவில், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், குருவிகுளம் வட்டார விவசாயிகள் குருவிகுளம், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் தங்கள் மனுக்களுடன் காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!
Open chat