May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

நீண்ட வரிசையில் நின்று குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் 9 மாதங்களுக்கு பின்னர் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.

கோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாதலங்கள் பொது மக்கள் பயன் பாட்டிற்கு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது இத்தடையை நீக்கி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் உத்தரவிட்டுள்ளார். இன்று (15ம் தேதி) முதல் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் மெயின் அருவி,ஐந்தருவி, புலியருவி, பழையகுற்றால அருவி ஆகியவற்றில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்படும் பொதுமக்களை ஒழுங்குபடுத்தி அருவிகளில் குளிக்க அனுமதிக்க மாவட்ட நிருவாகம் சார்பில் ஒவ்வொரு அருவிக்கும் ஒரு குழு நியமனம் செய்து அக்குழுவின் முடிவின் படி ஒவ்வொரு அருவியிலும் ஒரே சமயத்தில் எத்தனை எண்ணிக்கையிலான ஆண் மற்றும் பெண் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களோ அதன் அடிப்படையில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

..
இதனையடுத்து இன்று காலை 6 மணிக்கு குற்றாலம் மெயின் அருவியில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமகள்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
ஐந்தருவி, பழையகுற்றால அருவியிலும் இதே நிலை நீடித்தது. அருவி பகுதியில் கூட்டம் கூட போலீசார் அனுமதிக்கவிக்கவில்லை.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின் பேரில் போலீசார் செய்துள்ளனர்.

error: Content is protected !!
Open chat