January 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி மாவட்டத்தில் 33 பயனாளிகளுக்கு ரூ.27.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் இராஜலட்சுமி வழங்கினார்

;
தென்காசி மாவட்டத்தில் 33 பயனாளிகளுக்கு
ரூ.27.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் இராஜலட்சுமி வழங்கினா
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 33 பயனாளிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் ரூ.27.62 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் இராஜலட்சுமி வழங்கினார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர்  அலுவலக வளாகத்தில் இன்று வேளாண்மைத்துறை மற்றும்  தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின்  கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன்; தலைமை வகித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.இராஜலட்சுமி; பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டாம் பசுமை  புரட்சியை நிலைநிறுத்தும் வண்ணம் வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு  திட்டங்களை வழங்கி விவசாயிகளுக்கு உதவி வருகிறார்.  தென்காசி மாவட்டம் விவசாயம் நிறைந்த பூமியாகும். இங்கு விவசாயிகளின்  வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும்  வேளாண்மைத்துறையின் மூலமாக தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைத்துறை மூலம்  உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் பெற்று வேளாண்மை பணிக்கு  பயன்படும் வகையில் புதிய திட்டங்கள் துவக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
மேலும் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில்  ஒரு பண்ணைத் தொழிலை மட்டும் மேற்கொள்ளாமல் ஒன்றோடொன்று  தொடர்புடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பண்ணைத் தொழிலை  மேற்கொண்டு, நீர்வளத்தை சிறப்பாக பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டி  வாழ்வாதாரத்தை விவசாயிகள் உயர்த்தி கொள்ள முடியும். எனவே விவசாய  பெருமக்கள் தங்களுக்கு தேவையான திட்டங்கள் பெற்று தங்களின்  பொருளாதாரத்தை நிலைநிறுத்தி பயன்பெற்றிட வேண்டும். இவ்வாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்  வி.எம்.இராஜலட்சுமி பேசினார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை மூலம் தேசிய உணவு  பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின் கீழ் ரூ.1,15,000ம் மதிப்புள்ள சுழல்கலப்பை  ரூ34,000ம்- மானியத்தில் 14 பயனாளிக்கும், ரூ.1,20,000ம் மதிப்புள்ள
சுழல்கலப்பை ரூ.42,000ம்- மானியத்தில் 10 பயனாளிகளுக்கும், ரூ.8000ம்- மதிப்புள்ள விசைத்தெளிப்பான் ரூ.3,800ம்- மானியத்தில் 6 பயனாளிகளுக்கும்,  ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மானியத்தில் 2  பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் கறவை மாடுகள் மற்றும் திட்டம்  சார்ந்த பிற இடுபொருள்களும், தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.1,30,000ம்  மதிப்பிலான பவர்டில்லர் ஒரு பயனாளிக்கும்; ஆக மொத்தம் 33  பயனாளிகளுக்கு ரூ.27.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை  அமைச்சர் வி.எம்.இராஜலட்சுமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாச்சியர்  முருகசெல்வி, வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அ.சேதுராமலிங்கம், மாவட்ட  கூட்டுறவு அச்சக சங்கத்தலைவர் கண்ணன்(எ)இராஜு, நெசவாளர்  கூட்டுறவு சங்கத்தலைவர் ஆறுமுகம், பேரங்காடி துணைத் தலைவர்  இ.வேல்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன்,  முன்னாள் ஆவின் தலைவர் ரமேஷ், வேளாண்மை உதவி இயக்குநர்கள்  இரா.பொன்னுராஜ், சிவகுருநாதன், நயினார்முகம்மது,  இளஞ்செழியன், சங்கர், கால்நடை மருத்துவர் வசந்தா  உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

You may have missed

error: Content is protected !!
Open chat