வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் வேளாண்மையினை பயிர்களை தென்காசி மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டார பகுதிகளுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண்மை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிவகிரி பகுதியில் கரும்பு பயிர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்ட போது அங்கிருந்த கரும்பு விவசாயிகள், தாங்கள் 2018-19ம் ஆண்டில் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு கரும்பு விற்பனை செய்ததற்கான தொகையினை இன்னும் சர்க்கரை ஆலை நி;ர்வாகம் தரவில்லை என்றும், பொங்கலுக்குள் நிலுவைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இ;ம்மாதம் 31ம் தேதிக்குள் நிலுவைத்தொகை வழங்கப்பட்டு விடும். பொங்கலை விவசாயிகள் சிறப்பாக கொண்டாடலாம் என்றார்.
சிந்தாமணி கிராமத்தில் நெல் இயந்திர நடவு வயல், சுப்பிரமணியாபுரம் கிராமத்தில் நெல் விதைப்பண்ணை , தேவிப்பட்டினம் கிராமத்தில் கரும்பு பயிரில் சொட்டு நீர்பாசனம் மற்றும் விவசாயிகள் கலந்துக்கொண்ட பண்ணைப்பள்ளியில் வேளாண் அறிவியல் மையம் தொழில்நுட்ப வல்லுநர் சுகுமார், மற்றும் பணி நிறைவு பெற்ற வேளாண்மை அலுவலர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நாரணபுரம் பாலசுப்பிரமணியன் வயல் ஆய்வின் போது, தேசிய தோட்டக்கலை இயக்;க திட்டம் 2020-21 ஆண்டு சிப்பம் கட்டும் அறை கட்டுவதற்கு ரூ.2 லட்சம் மானியமும், நகரம் கிராமம் கோட்டியப்பனவயபல் ஆய்வின் போது, குறைந்த செலவில் வெங்காய குடோன் அமைப்பதற்காக ரூ.87,500 மானியமும் வழங்கப்பட்டது. இப்பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குநர்(பொ) க.நல்லமுத்துராஜா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, மற்றும் வேளாண்மை துணை இயக்குநர்(பொ) சேதுராமலிங்கம், வேளாண்மை உதவி இயக்குநர் ஆ.இளஞ்செழியன், தோட்டக்கலலை உதவி இயக்குநர் பவித்ரா, வேளாண்மை துணை அலுவலர் வைத்திலிங்கம், தோட்டக்கலை அலுவலர் நந்தகுமார், உதவி அலுவலர்கள் வைகுண்டசாமி, சண்முகவேல்ராஜன், வேளாண்மை உதவி அலுவலர்கள் .நயினார், கிருஷ்ண சங்கீதா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வக்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
More Stories
சசிகலா உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
மின்மாற்றியை நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தார்
சிறப்பு மருத்துவ முகாமினை நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்