பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தென்காசி மாவட்டத்தில் 41 மினி கிளினிக்குகள் அமையவுள்ளது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ;தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி மற்றும் அழகநேரி கிராமத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை மூலம் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்து பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர்ஒரு புதிய முயற்சியாக கிராமங்களிலிருந்து நகரம் வரை ஏழை, எளிய மக்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளில் மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க தமிழகத்தில் 2000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, கடந்த 14.12.2020 அன்று துவக்கி வைத்து, தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு வருகிறது. இதில், 1400 கிளினிக்குகள் கிராமப்புறங்களிலும், 200 சென்னை மாநகராட்சியிலும், 200 நகர்புறங்களிலும், 200 நகரும் மினி கிளினிக்குகளாகவும் அமையவுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 41 மினி கிளினிக் அமையவுள்ளது. தற்போது முதற்கட்டமாக 13 மினி கிளினிக் தொடங்கப்படவுள்ளது.
கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக அம்மா மினி கிளினிக்கை நாடி தங்களுடைய நோயை குணப்படுத்தி கொள்ளலாம். இந்த கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், நகரப்பகுதிகளில் காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள்.
அம்மா மினி கிளினிக்கில் புற நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை, தாய் சேய் நல பணிகள், தடுப்பூசி வழங்குதல், அவசர சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படும். இரத்த அழுத்தம், சர்க்கரை, புற்றுநோய் கண்டுபிடித்தல் பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சை முதியோர்களுக்கான சிறப்பு பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், தொற்று நோய் உள்ளவர்கள், முதியோர்கள் மற்றும் உடனடி சிகிச்சை தேவைப்படுவோர் என அனைவரும் பயன்பெறும் வகையில் அம்மா மினி கிளினிக்குகள் செயல்படும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, சிறுநீரில் உள்ள உப்பின் அளவு மற்றும் ஹீமோகுளோபின் ஆகிய ஆய்வக பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
தமிழகம் முழுவதும் கிராமங்கள் சூழ்ந்த புறநகர்ப் பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கும், உழைக்கின்ற மக்களுக்கும் நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ; வழிகாட்டுதலின்படி தமிழக அரசு செயலாற்றி கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் இன்று தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி, அழகநேரி ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் அம்மா கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்காசி மாவட்டத்தில் 9 அரசு மருத்துவமனைகளும், 46 அரசுஆரம்ப சுகாதார நிலையங்களும், 6 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும், 177 துணை சுகாதார நிலையங்களின் மூலம் பொதுமக்களுக்கு சிறப்பாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி நலத்திட்டத்தின் மூலம் ரூ.14,000ம் ரூ.2000 மதிப்புள்ள அம்மா மகப்பேறு ஊட்டசத்து பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 69,710 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.53.79 கோடி நிதி உதவியும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 18,499 அம்மா குழந்தைகள் நல பெட்டகமும் வழங்கப்பட்டுள்ளது.
நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கித் தரவேண்டும், அதுவும் குறிப்பாக ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மக்களுக்கு நோய் ஏற்படுகின்ற போது தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையிருக்கின்றது. அந்த சுமைகூட இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் அம்மாவின் அரசு, குறிப்பாக ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பகுதியிலேயே அம்மா மினி கிளினிக்குகளை உருவாக்கி, அப்பகுதி மக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை அம்மாவின் அரசு தொடர்ந்து வழங்கும். எனவே, இந்த அம்மா மினி கிளினிக்கை கிராம மக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி பேசினார்.
மேலும், முதலமைச்சரின் அம்மா கிளினிக்கை திறந்து வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியினையும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையினையும்;அமைச்சர்பார்
இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி, இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.நெடுமாறன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கலுசிவலிங்கம், நெசவாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆறுமுகம், பேரங்காடி துணைத்தலைவர் இ.வேல்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாணடியன், முன்னாள் ஆவின் தலைவர் ரமேஷ் உட்பட வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
More Stories
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த தென்காசி ஆட்சியர் திட்டம்
கருணை அடிபடையில் வேலை பெற்று கொடுத்த காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார்
அவசர கவனிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்