தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சியில் 566 பயனாளிகளுக்கு ரூ.2.9 கோடி மதிப்பில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் நாட்டுக்கோழி குஞ்சுகளை ஆதிதிராவிடார் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்;.
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம்; கால்நடைவளர்ப்பவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ; 566 பயனாளிகளுக்கு ரூ.2,91,8200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்ராஜலெட்சுமி பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ; வழிகாட்டுதலின் படி கிராமங்களில் வாழும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஏழ்மை நிலையில் உள்ளோர், மகளிர் குழு உறுப்பினர்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் ஆகியோரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக விலையில்லா ஆடுகள், கறவை பசுக்கள், நாட்டுக் கோழி வளர்ப்பு, புறக்கடை கோழி வளர்ப்பு ஆகிய திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் ; தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கடைக்கோடி கிராமபகுதிகள் வரை பொதுமக்களை தேடி அரசு நலத்திட்டங்கள் வந்தடைகின்றன.
பொதுவாக நமது பகுதி விவசாய தொழிலையே நம்பி வாழும் பகுதியாகும். இதற்கு இணையாக கால்நடை வளர்க்கப்பட்டு வருகிறது. கால் நடை வளர்ப்பவர்களுக்கு உதவியாக கால்நடைத்துறையின் மூலம் தேவையான திட்டங்கள் வழங்கப்படுவதுடன் கூடுதலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிக அளவில் கால்நடைகளை அரசு வழங்கி வருகின்றது.
அதனடிப்படையில், தென்காசி மாவட்டத்தில் விலையில்லா ஆடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் குருவிகுளம், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி, கடையம், வாசுதேவநல்லூர், கீழப்பாவூர், செங்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடப்பாண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மொத்தம் 2,111 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.2,68,09,700 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனடிப்படையில் ஒரு நபருக்கு 4 ஆடுகள் வீதம் ரூ.12,700 மதிப்புள்ள விலையில்லா ஆடுகள் 166 நபர்களுக்கு ரூ. 21,08,200 மதிப்பிலான விலையில்லா ஆடுகள் இன்று வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஊரக புறக்கடை கோழிவளர்ப்புத் திட்டத்தில் தென்காசி மாவட்டம், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி, கடையம், வாசுதேவநல்லூர், கீழப்பாவூர், செங்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 4,000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.81,00,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதனடிப்படையில் இன்று மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1 நபருக்கு 25 அசில் இன 4 வார நாட்டுக்கோழி குஞ்சுகள் வீதம் ரூ.2,025 மதிப்பில், 400 பயனாளிகளுக்கு ரூ.8,10,000 மதிப்பில் நாடடுக்கோழிக்குஞ்சுகள் மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த கையேடு வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் நோக்கம் கிராமபுறங்களில் விவசாய பணிகளுடன் சேர்ந்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து அதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் பெற வேண்டுமென்பதே ஆகும். எனவே அரசின் திட்டங்களை பெற்று பொருளாதார முன்னேற்றத்தில் சிறந்து விளங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் .வி.எம்.ராஜலெட்சுமி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.முகமது காலித், உதவி இயக்குநர்கள் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.கலையரசி, மரு.ரஹ்மதுல்லா, பேரங்காடி துணை தலைவர் வேல்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன், முன்னாள் ஆவின் தலைவர் ரமேஷ், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், உட்பட கால்நடை மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
More Stories
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
மானவர்களுக்கு விலையில்லா டேட்டா கார்டுகளை வழங்கினார் ஆட்சியர்
மானியத்துடன் கூடிய வீட்டு காய்கறி தோட்டத்தளையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்