தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவநாடானூர் மற்றும் பலபத்திரராமபுரம் கிராமங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்-ஐ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம், தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சிவநாடானூர் மற்றும் பலபத்திரராமபுரம் ஆகிய கிராமங்களில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை மூலம் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன் தலைமை வகித்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி மினி கிளினிக்குகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தென்காசி மாவட்டத்தில் கிராம புறங்களில் 41 அம்மா மினி கிளினிக்குகள், அமையவுள்ளது தற்போது வரை தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி, அழக நேரி, வெள்ளாளன்குளம், கடம்பன்குளம், வீரசிகாமணி கிராமத்திலும், வாசுதேவநல்லூர் வட்டாரம் நெல்கட்டும்செவல் கிராமத்திலும், கடையநல்லூர் வட்டாரம் காசிதர்மம் கிராமத்திலும், செங்கோட்டை வட்டாரம் கிளாங்காடு கிராமம் ஆகிய இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவநாடானூர், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பலபத்திரராமபுரம் ஆகிய கிராமங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. அம்மா மினி கிளினிக்குகள் மூலமாக ஏழை, எளிய மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அங்கேயே அவர்கள் தங்கள் உடலில் ஏற்படுகின்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள இயலும். இது வரலாற்றுச் சாதனையாகும்.
கிராமங்களில் துவங்கப்பட்டுள்ள அம்மா மினிகிளினிக்கை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களது உடல் நலத்தை பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும், என ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்; தெரிவித்தார்.
இந்நிகழ்;ச்சியில் 10 தாய்மார்களுக்கு தலா ரூ.2000 மதிப்புள்ள அம்மா பரிசு நலப்பெட்டகத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி; வழங்கினார்;.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கலுசிவலிங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகளின் நேர்முக உதவியாளர் இ.ரகுபதி, தென்காசி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முதன்மை அமைப்பாளர் சண்முகசுந்தரம், நெசவாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆறுமுகம், ஊத்துமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவுச்சங்கத்தலைவர் என்.ஹெச்.எம்.பாண்டியன் உட்பட வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
More Stories
ஆட்டோவை பறிமுதல் செய்ததால் நெல்லையில் நிதி நிறுவனம் முன்பு டிரைவர் தீக்குளித்து தற்கொலை
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
மானவர்களுக்கு விலையில்லா டேட்டா கார்டுகளை வழங்கினார் ஆட்சியர்