தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பாவூர்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 563 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.22 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் இராஜலெட்சுமி வழங்கினார்.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை மூலம் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன் தலைமை வகித்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மதிவண்டிகளை வழங்கி தெரிவித்ததாவது:-
கல்வி கற்கும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன் பெற வேண்டுமென்ற உயரிய நோக்கில் பள்ளிக்கல்வித்துறையில் இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கென அதிக நிதி ஒதுக்கிடு செய்து, பல்வேறு மகத்தான திட்டங்களை தமிழகத்தில் மாணவ, மாணவியர்களுக்கென செயல்படுத்தி கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியர்கள் இன்றைய நவீன உலகில் நடைமுறையில் உள்ள உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், மேலும் போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவியர்கள் அவர்களின் திறமையை வளர்த்து தங்களது தகுதியை மேம்படுத்தி கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் தங்களது நிலையையும், தங்களின் குடும்ப சூழ்நிலையையும், மேம்பாடு அடையச்செய்ய முடியும். அதற்கு அடிப்படையாக அமைவது கல்வியே ஆகும்.
மாணவ, மாணவியர்கள் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கிலும். பொற்றோர்களின் சிரமங்களை குறைப்பதற்கும். பள்ளி கல்வித்துறையில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மதிவண்டி, கல்வி உதவித்தொகை, மதிய உணவு, புத்தகப்பை, காலணிகள், புவியியல் வரைபடம், வண்ணப்பென்சில்கள், கிரையான்ஸ், உட்பட கற்றலுக்கு தேவையான 14 வகையான கல்வி உபகரணங்கள் அனைத்தையும் பாகுபாடின்றி தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.
தமிழகத்தில் பெண்கல்வி மற்றும் மேல்நிலை கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு, அரசு சார்ந்த உதவி பெறும் மற்றும் பகுதியாக நிதி உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் திட்டம் அம்மா-வால்; தொடங்கப்பட்டது. அம்மர் வழியில் செயல்படும் தமிழக அரசு 11-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் (2020-2021) தமிழகத்தில் 2,38,456 மாணவர்களுக்கும் 3,06,710 மாணவியர்களுக்கும். என மொத்தம் 5,45,166 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தொடங்கி வைத்தார்;.
அதனடிப்படையில், தென்காசி மாவட்டத்திற்கு 2020-2021 கல்வியாண்டிற்கு 11-ம் வகுப்பு பயிலும் 6,162 மாணவர்களுக்கும், 7,712 மாணவியர்களுக்கும் என மொத்தம் 13,874 விலையில்லா மிதிவண்டிகள் ரூ.5.48 கோடி மதிப்பில் வழங்கப்பட உள்ளது.
அதனைத்தொடர்ந்து, பாவூர்சத்திரம் ஒளவையார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம் டிபிஎஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளை சார்ந்த 199 மாணவர்களுக்கும், 364 மாணவியர்களுக்கும் என மொத்தம் 563 மாணவ, மாணவியர்களுக்கு முதற்கட்டமாக விலையில்லா மதிவண்டிகளை ரூ.22,09,962 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி பேசினார்.
அதனைத்தொடர்ந்து, பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம் டிபிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சார்ந்த 2019-2020-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 500 மேல் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு, முதல் பரிசாக ரூ.15,000 வீதம் 1 மாணவிக்கும், 2-ம் பரிசாக ரூ.10,000 வீதம் 13 மாணவர்களுக்கும் ஆகமொத்தம் 14 மாணவ, மாணவியர்களுக்கு தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன்; சொந்த நிதியின் கீழ் ரொக்கப்பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன் தலைமையில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன்; முன்னிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகர், தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் (பொ) ஜெயபிரகாஷ்ராஜன், சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) சிதம்பரராஜன், தென்காசி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முதன்மை அமைப்பாளர் சண்முக சுந்தரம், நௌசவாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆறுமுகம் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
More Stories
பொது உடைமைப் போராளி தா. பாண்டியன் மறைந்தார் வைகோ இரங்கல்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவிற்க சரத்குமார் இரங்கல்
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு சரத்குமார் வேண்டுகோள்