February 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி மாவட்டத்தில்  பொங்கல் பரிசு  தொகுப்பு வழங்கல்  அமைச்சர் இராஜலெட்சுமி தொடங்கி வைத்தார்

 

தென்காசி மாவட்டத்தில் 648 நியாயவிலை கடைகளில் உள்ள 4,38,775 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.117 கோடி மதிப்பில்   சிறப்பு பொங்கல் பரிசு  தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை   ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் இராஜலெட்சுமி தொடங்கி வைத்தார்.

 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கக்கன் நகரில் உள்ள காயிதேமில்லத் புது நியாயவிலை கடையில்  கூட்டுறவுத்துறை மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்  பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.2500- வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன் தலைமை வகித்தார்.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் இராஜலெட்சுமி
அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர்  தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக தமிழக மக்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500- ரொக்க பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய்;, ஆகியவற்றுடன் ஒரு துண்டுக் கரும்புக்குப் பதில் ஒரு முழுக் கரும்பு,  ஆகியவை ஒரு துணிப்பையுடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்தார்.

அதனடிப்படையில் தமிழகத்தில் சுமார் 2.06 கோடிக்கும் மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கம் வழங்குவதற்காக ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அதனடிப்படையில், தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு மற்றும் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் மொத்தம் 648 நியாயவிலை கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நியாயவிலை கடைகள் மூலம் பச்சரிசி 438.7 மெ.டன், சர்க்கரை 438.7 மெ.டன், உலர் திராட்சை 8,776 கிலோ, முந்திரி 8,776 கிலோ, ஏலக்காய் 2194 கிலோ மற்றும் ரூ.2,500 – ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு என மொத்தம் 4,38,775 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு  ரூ.117.01 கோடி மதிப்பில் வழங்கபட உள்ளது.

 

அதனைத்தெடாந்து, சங்கரன்கோவில் கக்கன் நகரில் உள்ள காயிதேமில்லத் புது 1ம் தெரு நியாயவிலை கடையில் 815 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் தகுதியுள்ள 807 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது. இதில் கூட்டுறவுத்துறை மூலம் 200 அரிசி பெறும் குடும்பஅட்டைதாரர்களுக்கு  பொங்கல் பரிசு தொகுப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 648 நியாயவிலைக்கடைகள் மூலம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு காலையில் 100 நபர்கள், பிற்பகலில் 100 நபர்கள் என தினமும் 200 நபர்களுக்கு மிகாமல் பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் நியாய விலை கடைக்கு சென்று சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொண்டு வருகின்ற தைப்பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இவ்வாறு அமைச்சர்
இராஜலெட்சுமி பேசினார்.

இந்நிகழ்ச்சியில்  சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர்  முருகசெல்வி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி (திருநெல்வேலி), மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்  சுபாஷினி (திருநெல்வேலி), மாவட்ட வழங்கல் அலுவலர் கோகிலாமுருகேசன், கூட்டுறவு சங்களின் துணை பதிவாளர்கள் முத்துசாமி, குருசாமி, வீரபாண்டி (பொது விநியோக திட்டம்), கூட்டுறவு பேரங்காடி துணைத்தலைவர் வேல்சாமி,

மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் கண்ணன்(எ)ராஜீ, மாவட்ட நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன், முன்னாள் ஆவின் தலைவர் ரமேஷ்  உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

error: Content is protected !!
Open chat